Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலரியை முந்தும் டிரம்ப்

வரும் நவம்பர் எட்டாம் தேதி, அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலரி கிளின்டனும் போட்டி இடுகிறார்கள். இதுவரை தேர்தலுக்கு முந்திய கருத்துகணிப்புகளில் ஹிலரி முந்நிலை வகித்த நிலையில், தற்போது டிரம்ப் அதில் முந்தி இருப்பதாக அமெரிக்க ஊடகங்களின் கருத்துகணிப்புகள் கூறுகின்றது.

 

ஹிலரி மீது எஃப்.பி.ஐ விசாரணை தொடங்க உள்ளதாக கூறியுள்ளதை அடுத்து அவருக்கு இந்த பின்னடைவு என்று கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், இந்த கருத்துகணிப்பு மாற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ