Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நவாஸ் ஷெரிஃப், புதின், அமிதாப்....மீண்டும் கிளம்பும் பனாமா சர்ச்சை!

லக தலைவர்கள், பிரபலங்கள் முறைகேடான வழியில் பனாமா நாட்டு வங்கிகளிலும், தொழில் நிறுவனங்களிலும் பதுக்கிய சொத்து மற்றும் பணம் குறித்த ரகசியத்  தகவல்கள் திரட்டப்பட்டன. இந்த தகவல்கள் அனைத்தும் ‘பனாமா லீக்ஸ்’ என்ற பெயரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் ஒரு கோடியே 15 லட்சம் தகவல்கள் திரட்டப்பட்டன.  இந்த ஆவணங்கள் அனைத்துமே, 35–க்கும் மேலான நாடுகளில் அலுவலங்களைக் கொண்டுள்ள பனாமாவைச் சேர்ந்த மொசாக் போன்செகா என்னும் சட்ட நிறுவனத்தின் வழியாக கசிந்தது.  இந்தப் பட்டியலில் தனிநபர் மற்றும் பல நிறுவனங்களும் அடங்கும். 

இந்தப் பட்டியலில் 2 ஆயிரம் இந்தியர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் பெயர் இடம் பெற்றிருப்பது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் நவாஸ் ஷெரீஃப்-ன் பெயர் பனாமா சொத்து சேர்ப்பு பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், அவரை விசாரிக்கக் கோரி, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் தெஹ்ரிக் -இ -இன்சாஃப் கட்சித் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் உட்பட பல எதிர்க்கட்சியினர் வழக்குத் தொடர்ந்தனர். 

மனுவை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட தகவல்கள்படி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்-ஐ விசாரிக்க உத்தரவிட்டது. 5 பேர் கொண்ட அமர்வை அமர்த்தி விசாரிக்க உள்ளனர். அந்த அமர்வில், தலைமை நீதிபதி அன்வர் ஜாகீர் ஜமாலி,  நீதிபதிகள் ஆசிப் சயீத் கான் கோஸா, அமீர் ஹனி முஸ்லிம், ஷேக் அஸ்மத் சயீத் மற்றும்  இஜஸுல் அசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அமர்வானது, மனுதாரர்களின் வழக்கறிஞர்கள், பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாஃப் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் முன்னிலையில் பாகிஸ்தான் பிரதமரிடம் விசாரணை நடத்தும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

நீதிபதி தலைமையில் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கொண்ட ஒரு ஆய்வுக் குழு இந்த வழக்கை விசாரிக்க வேண்டுமென்றும் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அரசாங்கம் மற்றும் மனுதாரர்கள் தங்களின் வழக்குக்கான விசாரணை குறிப்புகளை முன் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை நவம்பர் 3-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அதன்பின், இந்த வழக்கு தினமும் விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.  

இந்த சூழ்நிலையில், நவாஸ் ஷெரீஃப் அரசுக்கு எதிராக நடத்தவிருந்த பேரணியை இம்ரான்கான் ரத்து செய்துள்ளார்.

பனாமா ரகசியத் தகவல்களில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியாவின் பிரபல நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் உள்பட 500-க்கும் மேற்பட்ட பிரபலங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.  அவர்கள் செய்துள்ள முதலீடு குறித்து விசாரணை நடத்த தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. பல துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இக்குழுவில் இருக்கின்றனர். இந்தியாவிலும் இந்தப் பட்டியல் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

- நந்தினி சுப்பிரமணி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close