Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மலேசிய விமானம் எம்எச் 370 விபத்தின் பின்னணி இதுவா ?

மலேசிய விமானம் எம்எச் 370  திட்டமிட்டே கடலுக்குள் செலுத்தப்பட்டுள்ளதாக விசாரணைக் குழு சந்தேகம் எழுப்பியுள்ளது. 

கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 239 பயணிகளுடன், சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு, கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டது மலேசியன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான எம்எச் 370 விமானம். சிறிது நேரத்தில் விமானம் மாயமானதாக கூறப்பட்டது. விமானம் குறித்து ஆஸ்திரேலியாவின் விசாரணைக் குழு ஆய்வு செய்யத் தொடங்கியது. கடந்த ஜூன் மாதம் மாயமான விமானத்தின் பாகங்கள் டான்சானியா நாட்டுக் கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

விமான பாகங்களை ஆய்வு செய்ததைத் தொடர்ந்து, விமானம் திட்டமிட்டே கடலில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த Boeing 777 ரக விமானம் விபத்துக்குள்ளான போது விமானக் கட்டுப்பாட்டு அறையில் யாரும் இருந்ததாக தெரியவில்லை. எனவே விமானியின் திட்டமிட்ட செயலாக இருக்கக்கூடும் என விசாரணைக் குழு அறிவித்துள்ளது. விமானியின் நோக்கம் என்ன, எதற்காக இந்த விபத்தை நிகழ்த்த வேண்டும் என பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

எடிட்டர் சாய்ஸ்