Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கல்விக்காக ஒரு மணி நேரத்தில் 2,000 டாலர்களைக் குவித்த புகைப்படம்!

ஆயிரம் வார்த்தைகளால் விளக்க முடியாத விஷயத்தை ஒரு புகைப்படம் உணர்த்திவிடும் . அதனை நிரூபிப்பது போன்ற ஒரு சம்பவம் கானாவில் நடந்துள்ளது. பொதுவாகவே ஆப்ரிக்க நாடுகளில் குழந்தைகள் கல்வி என்பது சவால் நிறைந்தது. பத்து கிராமங்களுக்கு ஒரு பள்ளிதான் இருக்கும். வாகன போக்குவரத்தும் இருக்காது. குழந்தைகள் பல மணி நேரம் நடந்தே பள்ளிக்கு போவார்கள் வருவார்கள்.

அடர்ந்த காடுகளை கடக்க வேண்டியது இருக்கும். வனவிலங்குகளையும் கூட குழந்தைகள் எதிர்கொள்ள நேரிடும். இத்தகைய  சவால்களை எல்லாம் எதிர்கொண்டுதான்  பல ஆப்ரிக்க நாடுகளில் குழந்தைகள் பள்ளிக்கு ஆர்வமாக சென்று படித்து வருகின்றனர்.

கானாவில் அசம்பானேயே என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவன் ஜேக். ஐந்து வயதே நிரம்பிய சிறுவன். அங்குள்ள பள்ளியில் படித்து வந்தான். ஒரு முறை பள்ளியில் ஜேக்  மிக ஆர்வமாக ஓவியம் வரைந்துக் கொண்டிருந்தான். ஓவியம் வரைய அவன் காட்டும் ஆர்வத்தையும் அவனது முகபாவனையையும்  புகைப்பட கலைஞர் கார்லெஸ் கார்ட்டேஸ் என்பவர்  மிக தத்ரூபமாக தனது கேமராவில் பதிவு செய்தார்.

பின்னர், அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டார். 'இத்தகைய ஆர்வமிக்க குழந்தைகள் கல்வி கற்க நிதி தேவை ' என கார்லெஸ் தனது பதிவில் கூறியிருந்தார். ஜேக்கின் இந்த புகைப்படம் பலரையும் கவர,  சோசியல் மீடியாக்களில் பலமுறை பகிரப்பட்டது. ஜேக்கின் ஓவிய ஆர்வத்தை அந்த புகைப்படமே உணர்த்திவிட,  ஜேக் மற்றும் அவனது நண்பர்கள் கல்வி பெறுவதற்காக ஒரு மணி நேரத்தில் 2 ஆயிரம் அமெரிக்க டாலர்களை  கிட்டத்தட்ட ( ரூ.1, 33,000 ) குவிந்தது.

சிறுவன் ஜேக், சாலமன் அடுஃபா என்பவர் நடத்தி வந்த ஓவியப் பள்ளியில் படித்து வந்தான். தற்போது 'கோ ஃபன்ட் மீ ' என்ற ஃபேஸ்புக் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தின் மூலம். 10 ஆயிரம் டாலர்களை நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜேக்கும் அவனது நண்பர்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்!

படம் உதவி: https://www.instagram.com/therealcarloscort

 

 

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ