Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒவ்வொரு நான்கரை நாட்களுக்கும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படுகிறார்: யுனெஸ்கோ

உலகம் முழுவதும் ஒவ்வொரு நான்கரை நாட்களுக்கும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படுவதாக, யுனெஸ்கோ திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது.


கடந்த பத்து வருடங்களில் மட்டும் 827 பத்திரிகையாளர்கள் உலகம் முழுவதும் கொல்லப்பட்டுள்ளதாக அந்த தகவல் கூறுகிறது. 


அரபு  தேசங்களான சிரியா, ஈராக், எமென், லிபியா போன்ற நாடுகளில் பத்திரிகையாளர்கள் கொல்லப்படும் விகிதம் அதிகமாக உள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இந்த விகிதம் அதிகமாகவே உள்ளது.


 2006 முதல் 2015 வரை எடுத்த இந்த கணக்கெடுப்பில், கடைசி இரண்டு வருடங்களில் தான் பத்திரிகையாளர்கள் அதிகமாக கொல்லப்பட்டுள்ளனர்.
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ