Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இலங்கை சிறையில் இருந்து 5 தமிழக மீனவர்கள் விடுதலை

தமிழக மீனவர்கள் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை  நடத்த இலங்கை தூதர்கள் இந்தியா வந்துள்ளனர்.  டெல்லியில் இன்று நடந்த பேச்சுவார்தை சுமூகமாக முடிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதை முன்னிட்டு நல்லெண்ணத்தின் அடிப்படையில் யாழ்ப்பாண  சிறையில் உள்ள 5 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட உள்ளனர். இவர்கள் கடந்த அக்., 4-ம் தேதி காங்கேசன் கடல்பகுதியில் எல்லைத்தாண்டி மீன்பிடித்ததற்காக கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த ஐந்து பேரும் நாளை அல்லது நாளை மறு நாள் தாயகம் திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்