Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதில் தாமதம்...

பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல் பெறாமல் மக்களின் ஓட்டெடுப்பு முடிவு மற்றும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மட்டுமே கணக்கில் கொண்டு ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு சட்டத்தில் இடமில்லை என்று அந்நாட்டு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரிட்டன் ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக இருப்பதால் மற்ற உறுப்பு நாடுகளின் மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இங்கிலாந்தை நோக்கி பல்வேறு காரணங்களுக்காக படையெடுத்ததால் அந்நாட்டு மக்களுக்கு வேலையிழப்பும் முன்னுரிமையும் குறைந்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் காரணமாக கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி  ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதா, வேண்டாமா என்பது குறித்த ஓட்டெடுப்பை அந்நாட்டு அரசாங்கம் நடத்தியது. அதில் 51.9% மக்கள் பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இந்த வாக்கெடுப்பு முடிவின் காரணமாக அப்போது பிரிட்டன் பிரதமராக இருந்த டேவிட் கேமரூன் பதவி விலகினார். மேலும் பிரிட்டனின் கரன்சியான பவுண்டின் மதிப்பும் சர்வதேச அளவில் வீழ்ச்சி அடைய தொடங்கியது. இந்நிலையில் பல்வேறு அரசியல் மாற்றத்திற்கு பிறகு நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்ற தெரசா மே, 2017-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்நாட்டின் அரசியலமைப்பு சட்டப்படி பிரிட்டன் அங்கமாக இருக்கும் சர்வதேச அமைப்புகளிருந்து அதன் அரசாங்கம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி வெளியேறலாம் என்ற விதியின் கீழ் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது.

உறுப்பு நாடொன்று அமைப்பிலிருந்து வெளியேறுவதற்கான ஐரோப்பிய யூனியனின் விதியை மீறி செயல்படுவதற்கு பிரிட்டன் அரசாங்கம் முயற்சிப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இந்நிலையில் இதுகுறித்த வழக்கு பிரிட்டன் உயர் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் இறுதிக்கட்ட தீர்ப்புக்கு இன்று வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள் “அரசாங்கம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற முடியாது என்றும் அதற்கு நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறவேண்டியது அவசியம் என்றும்” தீர்ப்பளித்தனர்.

பிரிட்டன் அரசாங்கத்துக்கு சாட்டை அடியாக கருதப்படும் இந்த தீர்ப்பு, பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறுவதை மேலும் தாமதப்படுத்தும். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் அரசாங்கத்தின் செய்தித்தொடர்பாளர் “விரைவில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அமைச்சர்களின் சார்பாக உச்ச நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்படும்” என்றார்.

- ஜெ. சாய்ராம்,
(மாணவப் பத்திரிகையாளர்)

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ