Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் நடக்கும் சர்வதேச போதைப்பொருள் கட்டுப்பாட்டு மாநாட்டை பாக்., புறக்கணிப்பு

போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துவது குறித்த சர்வதேச மாநாடு இந்தியாவில் அடுத்த வாரம் நடக்கிறது.  உலக சுகாதார நிறுவனத்தின் போதைப் பொருள் கட்டுப்பாடு பிரிவு சார்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் 180-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் இந்த மாநாட்டை புறக்கணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு எங்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக சில சுகாதாரத்துறை அலுவலர்கள் வீசாவுக்கு அப்ளை செய்தனர்.  இருந்தபோதும் பாகிஸ்தான் இதில் கலந்து கொள்ளாது. என்றனர். இந்த மாநாட்டில் இ-சிகரெட், வர்த்தகம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close