Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியும்'..!

இஸ்ரேலின், ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவதற்கான மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

'கம்மோரா' என்ற புரதத்தின் மூலம், எச்.ஐ.வி வைரஸ்-ஐ 97 சதவீதம் வரை அழிக்க முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள்.

தற்போது எய்ட்ஸ் நோயின் வீரியத்தைக் குறைக்க சில மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த நடைமுறையினால், எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியாது.


இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஆப்ரஹாம் லோய்டர் என்பவர், 'நாங்கள் கடைபிடிக்கும் முறையால், எய்ட்ஸ் செல்களை அழித்துவிடுவோம். எனவே அது மீண்டும் உயிர்த்தெழ சாத்தியம் இல்லாமல் போகிறது.' என்றார்.


2015ல் மட்டும், எய்ட்ஸ் நோயால் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ