Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியா உடனான உறவை பலப்படுத்த முயலும் பிரிட்டன்..!

இன்று பிரிட்டன் பிரதமர் தெரசா மே இந்தியா வருகிறார். இரு நாட்டு உறவுகள் பலப்படுத்தும் நோக்கில் இந்த சுற்றுப் பயணம் இருக்கும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தியா உடனான வர்த்தக உறவையும் பலப்படுத்த பிரிட்டன் முயலும் என்று தெரிகிறது. 

 

கடந்த ஜூன் மாதம், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு, 'மக்கள் ஓட்டின்' மூலம் முடிவெடுத்தது. இதனால், பிரிட்டனின் சந்தை பொருளாதாரம் மாற உள்ள நிலையில்,  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து முழுவதுமாக பிரிட்டன் வெளியேறுவதற்கு முன்பு இந்தியா உடனான வர்த்தக உறவை மேம்படுத்த முனையப் போவதாகவும், இதன் மூலம் பிரக்சிட் ஒப்பந்தத்துக்குப் பிறகு சந்தை உறவு சுமூகமாக இருக்கும் எனவும் பிரிட்டன் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

இந்திய பயணம் குறித்து தெரசா மே,'இரு நாட்டுக்கும் இடையேயான உறவு ஒருங்கிணைந்த பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி இருக்கும். எங்களின் பல வருட கால நட்பை புதுப்பிக்கும் வகையில் இந்த பயணம் இருக்கும்.' என்றார்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close