Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹிலரி கிளின்டன் மீதான விசாரணையை முடித்தது எஃப்.பி.ஐ

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நாளை நடக்கவுள்ள நிலையில், ஹிலரி கிளின்டன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு, எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி எஃப்.பி.ஐ அவர் மீதான விசாரணையை முடித்துக் கொண்டது. 


ஹிலரி, செக்ரட்ரி அஃப் ஸ்டேட்டாக இருந்தபோது அவரது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியை, அதிகாரபூர்வ தொடர்புக்கு பயன்படுத்தி இருந்தார். அப்படி செய்தது தவறு என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இது பற்றி எஃப்.பி.ஐ, 'நாங்கள் மேற்கொண்ட விசாரணையின்படி கிளின்டன், சட்டத்துக்கு புறம்பான மின்னஞ்சல்கள் எதையும் அனுப்பவில்லை. இதனால், விசாரணையை முடித்துக் கொள்கிறோம்' என்று கூறினர்.

இந்த விஷயத்தைப் பற்றி, ஹிலரியை எதிர்த்து போட்டியிடும் குடியரசு கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், 'ஹிலரி இந்த விவகாரத்திலிருந்து தப்பித்துவிட்டார் என்று நம்ப முடியவில்லை. குற்றவாளி என்பது அவருக்கும் தெரியும், எஃப்.பி.ஐ-க்கும் தெரியும். இனி, அமெரிக்க மக்கள் தான் நீதி வழங்க வேண்டும்' என்றார்.

எடிட்டர் சாய்ஸ்