Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்ரம்ப் vs ஹிலரி! சோஷியல் மீடியாவில் யார் கொடி பறந்தது? #USelection2016

இன்று மாலை அமெரிக்க அதிபர் தேர்தல் துவங்க இருக்கிறது. யாருக்கு செல்வாக்கு அதிகம், அதிபர் தேர்தலில் யார் கொடி பறக்கும் என்பது தான் க்ளைமேக்ஸ். களத்தில் உள்ள நிலவரம் வேறு, ஆன்லைன் நிலவரம் வேறு என்றாலும் யாருக்கு அதிக செல்வாக்கு உள்ளது என்பதைத் தாண்டி இந்த செல்வாக்கு யாருக்குச் சாதகமாக உள்ளது என்பதும் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. 

ஹிலரியை விட சமூக வலைதளங்களில் வைரல் ரகம் என்றால் அது ட்ரம்ப் தான். ஆனால் அது ஆரோக்கியமான வைரலாக இல்லை. அவரைக் கலாய்த்து மீம்ஸ், போஸ்டர்கள் என தெறி வைரலான ட்ரம்ப் இடையில் கொஞ்சம் சீரியஸாக பேசி ஃபார்முக்கு திரும்பினார். அவரது ஆதரவாளர்களும் அவரது பேச்சுக்களை நியாயப்படுத்தினர். ஆனால் கொஞ்ச நாட்களிலேயே ட்ரம்ப் தன் வாயால் மீண்டும் சர்ச்சைகளுக்குள் சிக்கி தன் பெயரை கெடுத்துக் கொண்டார். 

முக்கியமான தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராமில் மட்டும் ட்ரம்ப்பை 28 மில்லியன் மக்களும், ஹிலரியை 21 மில்லியன் மக்களும் பின் தொடருகின்றனர். ஆனால் வீடியோ தளமான யூ-ட்யூப்பில் ட்ரம்பின் வீடியோக்கள் இதுவரை 16 மில்லியன் வியூஸ்களையும், ஹிலரியின் பக்கம் 35 மில்லியன் வியூஸ்களையும் பெற்று ட்ரெண்டாகிறது. 

யார் கொடி பறந்தது?

பின் தொடரும் ஃபாளோயர்கள் அடிப்படையில் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார். ஆனால் மக்கள் அதிகம் விரும்பி கேட்பது ஹிலரியின் உரைகளைத்தான். இந்த கணக்குகள் அனைத்துமே இவரது பக்கங்களுக்கான கணக்கு மட்டுமே இது தவிர இவரை ஆதரிக்கும் பக்கங்கள், மீடியாக்கள் என இவர்கள் பற்றிய விவாதம் வைரலாக பரவியுள்ளது. 

இருவருக்கும் இடையேயான முதல் நேரடி விவாதம் 12 தொலைக்காட்சி நெட்வொர்க்குகள் மூலமாக ஒளிபரப்பப்பட்டு  சுமார் 81 மில்லியன் பேர் இந்த விவாதத்தை கண்டுள்ளனர். இதுதவிர ஆன்லைன் யூ-ட்யூப் சேனல்கள், பைரஸி தளங்கள் மூலமாகவும் இந்த விவாதம் வைரலானது. மொத்தமாக சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமாக இந்த விவாதம் பார்க்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் ஒரு நிமிடத்தில் அதிகபட்சமாக ட்ரம்ப்பை குறிப்பிட்டு சுமார் 30000 பதிவுகளும், ஹிலரியை குறிப்பிட்டு சுமார் 24000 பதிவுகளும் பதிவாகின்றன‌

 
அதிகம் ட்விட் செய்யப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதமும் இதுதான். மொத்தமாக 90 லட்சத்துக்கும் அதிகமான முறை டரம்ப் மற்றும் ஹிலரியை குறிபிட்டு ட்விட் செய்யப்பட்டுள்ளன.

ட்விட்டரில் இவர்கள் பெயர் குறிப்பிட்ட ட்விட்கள்  ஒவ்வோரு விவாதத்தின்போதும் சுமார் 200 கோடி  டைம்லைனில் பார்க்கப்பட்டுள்ளது.

விவாதங்களின்போது சராசரியாக  ஹிலரியின் பெயரை குறிப்பிட்டு 1.5 மில்லியன் ட்விட்டுகளும், ட்ரம்ப் பெயரை குறிப்பிட்டு 2.1 மில்லியன் ட்விட்டுகளும் பதிவாகியது

மொத்தத்தில் ட்ரம்ப் குறித்த பதிவுகள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தாலும், பெண்களைப் பற்றி இழிவாக பேசிய வீடியோ, மீம்ஸ்கள் என நெகட்டிவாகவே அவரை அடையாளப் படுத்துகின்றன. அதேசமயம் ஹிலரியை பொறுத்தமட்டில் இ-மெயில் விஷயம் தவிர அவரைப் பற்றி பாசிட்டிவ் விஷயங்களே அதிகமாக இருந்தன. இன்று துவங்க இருக்கும் தேர்தலில் சோஷியல் மீடியாவில் எண்ணிக்கை அடிப்படையில் கில்லி யார் என்றால் ட்ரம்ப் தான். ஆனால் சொல்லி அடித்தது மக்களின் நம்பிக்கை அடிப்படையில் ஹிலரியே முந்துகிறார். இன்னும் இரண்டு நாளில் தெரியும் உண்மையில் யார் கொடி பறக்கப்போகிறது என்று. அமெரிக்க அதிபர் தேர்தல்களில் அதிகமாக சோஷியல் மீடியாவில் விவாதிக்கப்பட்ட தேர்தல் இது தானாம்...

- ச.ஸ்ரீராம்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ