Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோஸ்டா ரிக்காவில் 100% சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரம்

கோஸ்டா ரிக்காவில் இரண்டு மாதங்களாக முற்றிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy) மூலம் மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஐந்து மில்லியன் மக்கள் தொகை கொண்ட சிறிய நாடான கோஸ்டா ரிக்கா, நீர்மின் உற்பத்தி,  புவிவெப்ப மின் உற்பத்தி, காற்று மற்றும் சூரிய ஆற்றல்  ஆகிய முறைகளில் 80% மின்சார தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது.

மேலும் கடந்த ஜூன் - ஆகஸ்ட் மாதங்களில் கடுமையான மழைப் பொழிவின் போது, அந்நாட்டில் உள்ள நான்கு நீர்மின் உற்பத்தி நிலையங்களில் மின்சார உற்பத்தி செய்து நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்துள்ளன. மற்ற நாடுகளுக்கு கோஸ்டா ரிக்கா முன்மாதிரியாக திகழ்வதாக சுற்றுசூழல் வல்லுனர்கள் பாராட்டி வருகின்றனர்.
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ