Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘அமெரிக்கத் தேர்தலில் ஹிலரிக்கே வெற்றி..!’ - நிபுணரின் கருத்து

ஹிலரி

மெரிக்க ஜனாதிபதி தேர்தல் பரபரப்பாக நடந்து வரும் இன்றைய சூழ்நிலையில்,  ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர், பிறந்த தேதி மற்றும் தேர்தல் நடைபெறும் தேதியை வைத்து, ''ஹிலரி கிளின்டன்தான் அடுத்த அமெரிக்க அதிபர்'' என்று உறுதிபடக் கூறுகிறார் பெயரியல் நிபுணர் சி.வி.ராஜராஜன். 

ஹிலரி வெற்றி பெறுவதற்குரிய 7 காரணங்களையும் அவரே பட்டியலிடுகிறார்.

1) ஹிலரி (Hillary) எனும் பெயர் எண்ணின் கூட்டுத்தொகை 7 வருகிறது. ட்ரம்ப் (Trump) எனும் பெயரின் கூட்டுத் தொகை 6 வருகிறது. இந்தியாவுக்குரிய (India) எண் 3. இந்தியாவுக்கு 6-ம் எண் பகை எண்ணாகும். இதனால் இந்தியர்களுடைய ஆதரவு ஹிலரிக்கே இருக்கும். 

2) ஹிலரியின் பிறந்த தேதி 26-10-1947. இவரது உயிர் எண் 8. உடல் எண்ணின் மொத்தக் கூட்டுத்தொகை 3 வருகிறது.ட்ரம்பின் பிறந்த தேதி 14-06-1946. இவரது உயிர் எண் 5. உடல் எண்ணின் மொத்தக் கூட்டுத்தொகை 4 வருகிறது. 8-ம் எண்ணில் பிறந்த ஹிலரிக்கு அவரது பெயர் 7-ம் எண்ணில் அமைந்திருப்பது அவருக்கு ஆதரவாக இருக்கிறது. அதே வேளையில் 5-ம் எண்ணில் பிறந்த ட்ரம்புக்கு 6-ம் எண்ணில் அமைந்துள்ள அவரது பெயர் பொருத்தமில்லாமல் இருக்கிறது.

3) இருவரது பெயர்களின் ஆதிக்கத்தையும் பார்க்கும்போது ஹிலரிக்கு மிதவாதிகள், நடுநிலையாளர்களின் ஆதரவு  பெருமளவில் கிடைக்கும். ட்ரம்புக்கு எதிலும் தீவிரத்தன்மையுடன் இருப்பவர்களின் ஆதரவே கிடைக்கும்.

4) உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் ஹிலரி கிளிண்டனை ஒரு இந்தியப் பெண்ணாகவே பார்க்கிறார்கள். அமெரிக்கவாழ் இந்தியர்களிடமும் இந்த கருத்தே நிலவுகிறது. காரணம், தனது கணவரின் மீது அவர் கொண்டுள்ள மாறாத பாசம்தான்.

5) தேர்தல் 8-11-2016 அன்று நடைபெறுவதால், 8-ம் எண் காரரான ஹிலரிக்கு ஆதரவாக இருக்கிறது. 

6) ட்ரம்பின் மனைவி மெலினா ட்ரம்பின் பெயர் எண் கூட்டுத் தொகை 8. பிறந்த தேதியின் உயிர் எண் 8, உடல் எண் 2 என வருவதால் அவரது கணவருக்கு யோகம் தரும் அமைப்பு அவருக்கு இல்லாமல் இருக்கிறது.  

7) ஹிலரியின் கணவரான பில் கிளிண்டன் பிறந்த தேதி 19-08-1946. இவரது உயிர் எண், பெயர் எண் எல்லாமே 1-ம் எண்ணில் வருகிறது. சூரியனின் ஆதிக்கத்தில் உள்ள இந்த எண் அவரது மனைவிக்கு வெற்றியைத் தேடித் தருகிறது.

-எஸ்.கதிரேசன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ