Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நேட் ஜியோ புகழ் ஆப்கன் பெண்ணை நாடு கடத்திய பாகிஸ்தான்

நேஷனல் ஜியோகிராஃபிக் புகழ் ஆப்கன் அகதிப் பெண், ஷர்பத் குலாவை பாகிஸ்தான்,  நாடு கடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் அகதிகள் முகாம்களில் 33 வருடங்களுக்கு முன்னர் கவலையான முகத்துடன் பச்சைநிறக் கண்களோடு காணப்பட்ட ஷர்பத் குலா (12) என்ற சிறுமியை அமெரிக்காவின் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர் புகைப்படம் எடுத்தார். அந்த புகைப்படம் 1985-ம் ஆண்டு, நேஷனல் ஜியாகிராஃபிக் இதழின் அட்டைப் படத்தில் வெளிவந்து 'ஆப்கன் பெண்' என்று உலகம் முழுவதும் அவர் பிரபலமானார். 

சில நாட்கள் முன்பு, 45 வயதான ஷர்பத் மீது பாகிஸ்தான், போலியான அடையாள அட்டையைப் பெற்று பாகிஸ்தானில் தங்கியுள்ளதாக குற்றச்சாட்டுப் பதிவு செய்தது. இந்தக் குற்றத்துக்காக ஷர்பத் குலாம், அவரது தாய் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று ஷர்பத் தனது நான்கு குழந்தைகளுடன், ஆஃப்கான் தூதரக அதிகாரிகள் உதவியோடு ஆஃப்கானுக்கு நாடு கடத்தப்பட்டுவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.  மேலும் அவர் உடல்நலம் சரியில்லாத நிலையில் இருந்ததாகவும் அவர் விருப்பத்துடன்தான் ஆஃப்கானுக்கு அழைத்து செல்லப்பட்டார் என்றும்  தகவல் வெளியாகியுள்ளது. 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close