Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கனடா குடியேற்ற வலைதளம் முடங்கியது..!?

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னிலை வகித்துக் கொண்டிருக்கிறார். இதனால், அமெரிக்கர்களில் நிறைய பேர் கனடா நாட்டுக்கு குடிபெயர, கனடா குடியேற்ற வலைதளத்தை அணுகவே, அந்த இணைய தளம் முடங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

 

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றால், நாட்டைவிட்டு வெளியேறுவோம் என்று ட்ரம்ப்க்கு எதிராக அமெரிக்கர்கள் சிலர், அவரது பிரசாரத்தின்போதே கூறி வந்தனர். இதையடுத்து, இன்று ட்ரம்ப் ஹிலரியை விட நிறைய இடத்தில் முன்னணியில் இருக்கிறார். இதனால், கனடா நாட்டுக்கு குடியேற, அந்நாட்டின் அதிகாரபூர்வ குடியேற்றத்துக்கான வலைதளத்தை நிறைய பேர் பயன்படுத்தியதால், முடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல நியூசிலாந்து குடியேற்ற வலைதளத்தையும் அதிக பேர் அணுகியுள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ