Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமெரிக்கத் தேர்தலில் அசத்திய 3 தமிழர்களின் அசர வைக்கும் பின்னணி!

                        

உலகமே எதிர்பார்த்து வந்த அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நிறைவடைந்தது. தேர்தலுக்கு முன்பு வரையில் அதிபர் வேட்பாளர்கள் ஹிலரியும் ட்ரம்பும் ஒருவர் மாற்றி ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர். ஆனால், தேர்தல் முடிவில் 276 வாக்குகள் பெற்று டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். ஹிலரிக்கு 216 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அதேநேரத்தில், நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபைக்கும் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் இதுவரையில் இல்லாத வகையில், அதிக அளவில் இந்தியர்கள் போட்டியில் குதித்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஜனநாயக கட்சியின் சார்பில் களமிறங்கினர். யாரும் எதிர்பாராத வகையில், மூன்று தமிழர்கள் செனட் சபைக்கு தேர்வாகியுள்ளனர். 

கமலா ஹாரிஸ்(51): 

ஜனநாயகக் கட்சி சார்பில் வெற்றி பெற்ற கமலா ஹாரிஸின் பூர்வீகமே சென்னைதான். அமெரிக்க செனட் சபைக்குள் இந்தியர் ஒருவர் நுழைவது இதுவே முதல்முறை. இந்த வெற்றியின் மூலமாக கமலா வரலாற்று சாதனை நிகழ்த்தியுள்ளார். 2011-ம் ஆண்டு முதல் கலிஃபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக பதவி வகித்து வந்தார். ஜனநாயகக் கட்சியிலும் தீவிரமாக பணியாற்றி வந்தார். அவரது தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் மார்பக புற்றுநோய் மருத்துவராகப் பணிபுரிந்தவர். கமலாவின் தந்தை ரொனால்டு ஹாரீஸ்க்குப் பூர்வீகம் ஜமைக்கா. பொருளாதாரப் பேராசிரியராக பணிபுரிந்தவர். கமலாவும் அவரது தங்கை மாயாவும் பிறந்து வளர்ந்தது எல்லாமே கலிஃபோர்னியாவில்தான். சியாமளாவின் திருமண வாழ்க்கையும் நீண்டநாள் நீடிக்கவில்லை. கமலாவின் சிறு வயதிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர். தொடக்கத்தில் இருந்தே வழக்கறிஞர் படிப்பின் மீது மிகுந்த காதலோடு இருந்தார். 2009ம் ஆண்டு கமலா எழுதிய  Smart on Crime: A Career Prosecutor's Plan to Make Us Safer என்கிற புத்தகத்தில் குற்ற வழக்குகள் குறித்தும் அதன் தீர்வுகள் குறித்தும் எழுதியுள்ளார். இது அமெரிக்காவாழ் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, பொதுமக்களுக்கான உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து மேடைகளில் பேசி வருகிறார். இதனாலேயே, ' கமலாவுக்கு கலிஃபோர்னியா மக்கள் ஆதரவை வாரி வழங்கினார்கள்' என்ற பேச்சும் உள்ளது. 

பிரமிளா ஜெய்பால் (51): 

அமெரிக்கா நாடாளுமன்றத்தின் கீழ்சபையான பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்  பிரமிளா ஜெய்பால். இவர் சியாட்டில் பகுதியில் தேர்வாகி இருக்கிறார். பிரதிநிதிகள் சபைக்குத் தேர்வான முதல் இந்தியப் பெண் எம்.பி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர், சென்னையில் சில காலங்கள் வசித்துள்ளார். சமூகப் பணிகள் மீது அதிக ஆர்வம் கொண்டவர். பிறகு, தீவிர அரசியலிலும் இறங்கினார். அவரது சமூகப் பணிகளுக்கு கிடைத்த அங்கீகாரமாகத்தான் தன்னுடைய வெற்றியைப் பார்க்கிறார் பிரமிளா. 

ராஜா கிருஷ்ணமூர்த்தி (42):

தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு வெற்றி வாய்ப்பைப் பரிசளித்துள்ளனர் சிகாகோ நகர மக்கள். பிரநிதிகள் சபையை அலங்கரிக்க இருக்கிறார் ராஜா. இவர்  சிறு வயதாக இருக்கும்போதே, அவருடைய குடும்பத்தினர் அமெரிக்காவில் குடியேறினர். அமெரிக்காவில் வளர ஆரம்பித்த ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு அமெரிக்கா மிகவும் பிடித்த நாடாக மாற ஆரம்பித்தது. அங்கேயே சட்டப்படிப்பு படித்து முடித்தார். அதோடு நிற்காமல் என்ஜினீயர் படிப்பையும் முடித்தார். அதற்குப் பிறகு அமெரிக்காவில் தொழில் அதிபராக வளர்ந்தார். ஒபாமாவின் நல்ல நண்பனாக நீண்ட நாட்கள் இருந்து வந்த அவருக்கு அரசியலில் ஈடுபாடு வந்தது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

அதேபோல், சிலிகான் வேலியில் இருந்து குஜராத்தைச் சேர்ந்த அமி பெரா வெற்றி பெற்றிருக்கிறார்.  1965-ல் பிறந்த பிரமிளா ஜெயபாலும் ராஜா கிருஷ்ணமூர்த்தியைப் போன்றே சிறு வயதாக இருக்கும்பொழுதே அவரது குடும்பம் இந்தோனேஷியாவுக்கு குடி பெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல,கலிபோர்னியாவின் மற்றொரு பகுதியில், ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட இந்தியாவைச் சேர்ந்த 40 வயதான ரோஹித் கன்னா, வெற்றி பெற்றுள்ளார். ' அனைவருடனும் இணைந்து செயலாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்' என்கிறார் டொனால்ட் ட்ரம்ப். 

மிக்க மகிழ்ச்சி...! 

-வே. கிருஷ்ணவேணி

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close