Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அதானியின் மிகப்பெரிய திட்டத்திற்கு ஆஸ்திரேலியா க்ரீன் சிக்னல்

இந்தியாவின் அதானி குழுமம் ஆஸ்திரேலியாவில் குவீன்ஸ்லாந்து மாகாணத்தில் உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்தை உருவாக்க அந்த அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. 

 குவீன்ஸ்லாந்து மாகாணத்தில்  அதானி குழுமத்தின் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளுக்கு எதிராக குவீன்ஸ்லாந்து பூர்வக்குடியினர் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அதுமட்டுமின்றி குவீன்ஸ்லாந்து அரசு, நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி அதானிக் குழுமத்தின் திட்டம் உட்பட பல்வேறு புதிய திட்டங்களுக்கு தடைவிதித்து, வாட்டர் லைசன்ஸ் பெற வேண்டும் என்ற சட்டத்தை அறிமுகப்படுத்தியது.  

புதிய நீர் சட்டம் அதானி நிலக்கரி சுரங்கத் திட்டத்தை பாதிக்கும் அபாயம் இருந்து வந்த நிலையில்,  இன்று குயின்ஸ்லாந்து  அரசு கொண்டு வந்த புதிய குடிநீர் சட்ட (water laws) திருத்தங்களில், அதானி நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கு குடிநீர் சட்டத்தில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. அதானி குழுமம்,  21 பில்லியன் டாலர்கள் செலவில் உருவாக்க உள்ள கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத் திட்டத்திற்கு (Carmichael mine project)  பல்வேறு தடைகள் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ