Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புகையிலை பொருட்கள் பாதிப்பால் இந்தியாவில் தினசரி 2,500 பேர் உயிரிழப்பு


புகையிலை பொருட்களின் பாதிப்பால் ஏற்படும் நோய்களால் இந்தியாவில் தினசரி 2,500 பேர் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


உலக சுகாதார மையத்தின் சர்வதேச சிகெரட் பாக்கெட் சுகாதார எச்சரிக்கை பிரிவு, அதன் ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் இனி புகையிலை பொருட்களின் பாக்கெட்டுகளில் 85 சதவீத எச்சரிக்கை படங்களை வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை படம் வைக்கும் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

நேபால், வனுயட்டு ஆகிய நாடுகள் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இந்த நாடுகள் தங்கள் நாட்டில் விற்பனை செய்யும் புகையிலைப் பொருட்கள் பாக்கெட்டுகளில் 90 சதவீதம் எச்சரிக்கை படங்களை வைப்பதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த அறிக்கையில் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதால், ஏற்படும் நோய்களால் தினசரி 2,500 பேர் இந்தியாவில் உயிரிழப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இவற்றில் 5,500 பேர் 8 வயதுக்கு குறைவானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் 12 கோடி பேர் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close