Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மான்செஸ்டரில் ஹைதராபாத் பிரியாணி சுவைக்கலாம் வாங்க! sponsored content

“என்ன தாத்தா, குளிர் அடிக்குதா? இப்போ ஃபால் சீசன். கனெட்டிக்கட்ல அப்படித்தான் இருக்கும். இதே டெக்சாஸ்ல அவ்வளவு குளிர் இருக்காது.’ என்றபடியே தாத்தாவுக்கு ஒரு சால்வையைக் கொடுத்தான் சேகர். முதல் முறையாக தன்னைப் பார்க்க ஹைதராபாத்திலிருந்து அமெரிக்கா வந்திருக்கிறார். ஃப்ளைட்டில் இறங்கியதில் இருந்தே அவ்வளவு சகஜமாக இல்லாதது போலத்தான் இருந்தார். நியுயார்க்கின் ஜேஎஃப்கேவோ, இங்கே உள்ள பிரம்மாண்ட கட்டடங்களோ அவரை ஈர்க்கவில்லை. பழைய காலத்து ஆளாயிற்றே. இப்போதும் அவர் பிறந்து வளர்ந்த கிராமத்தின் கதைகள் பற்றித்தான் பெரும்பாலான நேரங்களில் பேசிக் கொண்டிருப்பார்.

அவரது அவஸ்தையைப் புரிந்து கொண்டவனாய் சேகர் அவரை வெளியே அழைத்துச் செல்லத் தீர்மானித்து காரில் ஹார்ட்போர்ட் நகரத்தின் வீதிகளில் இந்திய மக்கள் அதிகம் உள்ள வீதிகள் வழியாக சென்றான். இந்தியர்களை வழியில் கண்டதில் தாத்தாவின் கண்களில் கொஞ்சம் மகிழ்ச்சி தெரிந்தது.

தாத்தாவிடம் “இப்போ நாம வந்திருக்கிறது மான்செஸ்டர். இது ஒரு காலத்துல பட்டு மில்கள் நிறைஞ்ச இடமா இருந்தது. இப்போ மக்கள் அதிகம் ஷாப்பிங் செய்ய இங்கதான் வருவாங்க’ என்றான். தாத்தா அதை மெளனமாக கேட்டுக் கொண்டார்.

கார் இப்போது தாரணி உணவகத்தின் முன் நின்றது. வெளிப்புறம் பார்ப்பதற்கு அமெரிக்க கட்டடமாக இருந்தாலும் உள்ளே பணியாளர்களில் துவங்கி, பெரும்பாலான ஆட்கள் இந்தியர்களாகவே இருந்தனர். அது தாத்தாவுக்கு சற்று ஆச்சரியத்தை அளித்தது. “தாத்தா இது முழுக்க முழுக்க இந்திய உணவுகள் குறிப்பா தென்னிந்திய உணவுகள் கிடைக்கும் உணவகம். இன்னைக்குதான் புதுசா திறந்திருக்காங்க. ஆனா இந்த தரணி உணவகத்தி்ன் அல்பேனி கிளையில் நான் சாப்பிட்டிருக்கேன். ரொம்பவும் சுவையான உணவு இங்க கிடைக்கும்.” என்று கூறிக் கொண்டே காலியாக இருந்த இருக்கையில் இருவரும் அமர்ந்தார்கள்.

மெனுவைக் கொண்டு வந்து வைத்த பணியாளர் ஒரு புன்னகையோடு தண்ணீரை கண்ணாடி கிளாஸ்களில் ஊற்றினார். தாத்தாவைப் பார்த்ததும் “நீங்க அமெரிக்காவுக்கு புதுசா வந்திருக்கிறீங்களா?” என்று கேட்டார். தாத்தா அவரிடம் “ஆமாம், ஹைதராபாத்திலிருந்து வந்திருக்கிறேன்” என்றார். “என் சொந்த ஊர் செகந்தராபாத் ஐயா, உங்களை இங்கே சந்திப்பதில் மகிழ்ச்சி. உங்களுக்கு என்ன உணவு கொண்டு வரட்டும்” என்று கேட்டார். சக இந்தியர் ஒருவர் தன்னுடன் சகஜமாக உரையாடுவதைப் பார்த்த தாத்தாவுக்கு குஷியாகிவிட்டது. “என்ன இருக்கிறது” என்று கேட்டார்.

“இங்கே ஆந்திராவின் கடல் புறங்களில் பிரபலமான பெசரட்டு குருமா, ஏராளமான தோசை வகைகள், ஹைதராபாத்தில் புகழ்பெற்ற நிஜாமி கிச்சனின் தம் பிரியாணி, தமிழ்நாட்டின் செட்டிநாடு உணவுவகைகள் மற்றும் இந்திய - சீன உணவு வகைகளும் இருக்கிறது. அதனுடன் ஜிலேபி, சாட்டுகள், இந்தியத் தின்பண்டங்கள் மற்றும் கேக்குகள் ஆகிய 50 வகைகள் கிடைக்கும்.” இந்திய உணவு வகைகள் குறிப்பாக ஹைதராபாத் பிரியாணி கிடைக்கிறது என்றதும் அகமகிழ்ந்த தாத்தா அந்த பணியாளரிடம் தனக்கான உணவை கூறிவிட்டுக் காத்திருந்தார். இப்போது அவர் கிட்டத்தட்ட ஹைதராபாத்தில் இருப்பது போன்ற உணர்வதைப் பார்த்து மகிழ்ந்தான் சேகர்.

பாஸ்டன், ராலே மற்றும் அல்பேனியில் பெருவெற்றி பெற்றதைத் தொடர்ந்து கனெட்டிக்கட்டில் உள்ள மான்செஸ்டர் மாநகரில் துவங்கப்பட்டுள்ள இந்த உணவகம் இந்தியர்கள் வாழும் பகுதியில் உள்ளதால் அங்கே உள்ள இந்தியர்களுக்கு தென்னிந்திய உணவுகளை அளித்து மகிழ்விக்கிறது. ஆல்டாமவுண்ட் உணவுக் குழுமத்தின் பகுதியான தரணி, தாமினேனி குழுமத்துடன் இணைந்து இந்த உணவகத்தைத் துவக்கியுள்ளது.

இதன் துவக்கவிழாவில் பேசிய நியூயார்க் கிளையின் உரிமையாளர் ஸ்ரீதர் பெண்ட்யாலா கூறுகையில் தரணியின் இந்த உணவக முறை, செயலாக்கும் பாணி, உயர்தரமான உணவு மற்றும் உணவக அமைப்பு ஆகியவை சிறப்பாக உள்ளது என்றும் இது சிறப்பாக செயல்பட தன் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் கூறினார். பிரபாகர் தாமினேனி இந்த குழுமத்தின் விரிவாக்கம் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். “தாய்நாட்டை விட்டு பல மெயில் தூரம் தள்ளி இருக்கும் இந்த இந்திய மக்களுக்கு எந்த வித சமரசமும் இன்றி சிறப்பான உணவை அளிப்பதே எங்களுக்கு மகிழ்ச்சி” என்றார்.

மாசேசூசட்ஸ், வர்ஜீனியா, நியூயார்க், வடக்கு கரோலீனா மற்றும் டெக்சாஸில் புதிய கிளைகளை துவங்கவிருப்பதாகவும், கடந்த மூன்று வருடங்களின் கடின உழைப்புதான் இன்று தரணி எனும் தங்களது லட்சிய உணவகம் என்றும் பாஸ்கர் ரெட்னம் கூறினார்.

இந்த வார இறுதியில் மான்செஸ்டர் தரணியில் கிராண்ட் மெகா பஃபே வை சுவைத்து மகிழுங்கள்.

முகவரி:
 
DHARANI MANCHESTER
1141 TOLLAND TURNPIKE,
MANCHESTER, CT 06042
 
தொடர்புக்கு:
D. Prabhakar
(860) 432-1122
INFO@DHARANIUS.COM
www.dharanius.com

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ