Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய பர்தா ஸ்டேட்மென்ட்! - ஃபேஷனில் அசத்தும் சம்மர் அல் பார்சா

சம்மர் அல் பார்சா

பர்தா உடையிலும், ஃபேஷன் டிரெண்ட் செய்ய முடியும் என நிருபித்திருக்கிறார் சம்மர் அல் பார்சா (Summer Al Barcha). சிரியா நாட்டை சேர்ந்தவர். பர்தாவில் டிரெண்டியான ஸ்டைல் மற்றும் கலாச்சாரப் பின்ணனி கொண்டவர்களை, பிரெஞ்ச் மொழியில் Bourgeois-Bohemian என்றும், ஆங்கிலத்தில் Hipster எனவும் சொல்கிறார்கள். இவர்களுக்கு எந்தெந்த இடங்களுக்கு, எப்படிப்பட்ட காஸ்ட்யூமில் போகலாம் என்பது அப்டேட்டாக தெரியும். Hipster-களின் முக்கிய நோக்கமே, இன்றைய  டிரெண்டைப் பின்பற்றாமல், புதிதாக ஸ்டைல் ஒன்றை உருவாக்கி கெத்து காட்டுவதுதான்.

இணையத்தில் டிரெண்டி ஃபேஷன் இளவரசிகள் பலர் வலம் வருவதால், பட்டென இந்த ஸ்டைல் வைரலாகப் பரவுகிறது. உண்மையில் பலருக்கு ஆடை என்பது, தங்கள் குணாதிசியத்தையும், எனர்ஜி லெவலையும் காட்டுவதற்கு ஏற்ற வழியாகக் கருதுகிறார்கள். ஒருவர் அணிந்த உடை வாயிலாக ஒருவர் அளவிடப்படுவது/அறியப்படுவதுதான் இன்றைய உலகம். அதனால், இதை எல்லாம் மனதில் வைத்து கலாச்சாரத்தையும் விட்டுக்கொடுக்காமல், அதே சமயம் டிரெண்டையும் பிடித்து கவனிக்க வைத்துவிட்டார் சம்மர் அல் பார்சா, 'Hijabi Hipster' எனப்படும் அமைப்பின் நிறுவனர்.

சம்மர் அல் பார்சாவின் பிளாக்கையும், இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் புரட்டியபடி வலம் வந்தால், ஃபேஷன் டிப்ஸ் மற்றும் போட்டோவுக்குள் போட்டோ கொட்டிக்கிடக்கின்றன. இவர் பயன்படுத்தும் ஒவ்வொரு பேன்ட் மற்றும் ஸ்கர்ட் ஆகியவை சிம்பிளாக இருந்தாலும், ரஜினி போல சின்ன ஸ்டைலையும் அதில் புகுத்தி இருக்கிறார். முஸ்லீம் பெண்கள் கட்டாயம் உடுத்தக்கூடிய ஹிஜாப் (Hijab) எனப்படும் தலையைச் சுற்றி மூடும் துணியிலும் வித்தியாசம் காட்டி இருப்பதுதான் ஆச்சரியம்.

சரி, யார் இந்த சம்மர் அல் பார்சா?

சிரியா நகரில் பிறந்து, அமெரிக்காவில் வளர்ந்தவர். எனவே இரு நாட்டும் கலாச்சாரத்திலும்,உடையிலும் இவருக்கு நல்ல புரிதல் உண்டு. சிறுவயதிலேயே அவர் வைத்திருந்த பார்பி பொம்மைகளுக்கான உடைகளை அவரே பலவிதமாக டிசைன் செய்து அசத்துவார். சின்ன வயதில் எற்பட்ட இந்த ஆர்வம்தான் இவரை பேஷன் துறைக்கு இழுத்து வந்திருக்கிறது. பிஸினஸ் மேனேஜ்மென்ட் படித்துள்ளவர் என்பதால், மார்க்கெட்டை வசப்படுத்தும் யுக்தியையும் தெரிந்து வைத்து இருக்கிறார். இவர் வளர்ந்ததும், ஹிஜாப் உடுத்தவேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால், அவருக்கு பழைய ஸ்டைலில் பர்தா அணிய இஷ்டமில்லை. ஆனால், கடவுள் மீதான பக்தி அவரை அணிய தூண்டியது. அதற்கான தீர்வுதான் இந்த புதிய பர்தா ஸ்டேடென்ட். 'இன்றைய ஃபேஷனுடன் சேர்த்து, ஹிஜாப்பைக் கட்டாயம் பின்பற்ற முடியும் என்பதை உறுதியாக நம்பியதன் வெளிப்பாடே நான் உடுத்தும் எளிமையான உடைகள்' என அடக்கமாகவே சொல்கிறார். ஒரு உடையை முழுமைப் படுத்துவது, ஒருவர் அணியும்வாட்ச் என்பது இவரது கருத்து.

Hijabi Hipster :

சாதாரணமான, ஆனால் மாடர்ன்னான, எளிதான உடையுடன் அணிய கூடிய பர்தா தான் இந்த ஹிஜாப். நாள் முழுக்க இந்த பர்தாவை உடுத்தினாலும், அது அணிவதற்க வசதியாவும் மாடர்னாகவும் இருந்ததால்தான் இவரது பேஷன் ஹிட் அடித்திருக்கிறது. இதற்காக, பார்சிலோனா, ஸ்பெயின், மிலன், இத்தாலி, ஜகார்த்தா, இந்தோனேஷியா எனப் பல நகரங்களை சுற்றி வந்திருக்கிறார். அங்கேயும் இந்த ஹிப்ஸ்டர் டிரெண்டை உருவாக்கி இருக்கிறார். இவர் ஷாப்பிங்கிற்கு என தனியாக ஏதும் திட்டங்களை வைத்திருக்கமாட்டார். பெரும்பாலும் கடைகளுக்கு நேரடியாகச் சென்று, தனக்கு விருப்பமானதை செலக்ட் செய்து, தேவைப்படும் அளவுக்கு வாங்கிக் கொள்கிறார். உடைகளில் இவருக்குப் பிடித்த நிறம் க்ரீம். அதே சமயத்தில் முகத்தில் மேக்-அப் போடுவது அறவே பிடிக்காது. அதற்கான காரணம் கேட்டால், "அது டிசைன் செய்வதைவிட மிகவும் கடினமான வேலை" எனச் சொல்கிறார்.

பர்தாவில் அப்படி என்ன பேஷன் டிசைன் செய்திருக்கிறார்?

பர்தாவில் பேஷன் என்றதும் கலர்கலர் ஜிகினா போடுவதோ, சின்ன கண்ணாடிகளால் டிசைன் பொருத்துவதோ, எம்பிராய்டரி நூல் வேலைப்பாடுகள் மட்டும் இல்லை. ஸ்கர்ட்டுக்கு தகுந்த கலரில் பர்தா; வெவ்வேறு மெட்டிரியலில் கிராண்ட் லுக் காட்டுவது; கருப்பு கலரில் மட்டும் இல்லாமல், வயலெட், பிரவுன், ஆரஞ்சு, நீலம் எனப்பல வண்ணங்களில் பர்தா உருவாக்கி இருக்கிறார். தவிர அதை அணியும் விதத்திலும் ரிச் லுக் காட்டி அசத்துவது என இஞ்ச் பை இஞ்ச் பர்தாவை செதுக்கி இருக்கிறார் சம்மர் அல் பார்சா.

'இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் @ascia_akf, @somethingnavy, Chiarra Ferragni ஆகியோர்தான் என் ஸ்டைல் ஸ்டேட்மென்டுக்கு ரோல் மாடல்கள். இதுதவிர H&M உடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். ஏனெனில் அவர்கள்ஃபேஷன் துறையில் முக்கியமானவர்கள் என்பதுடன், என்னைப் போன்ற இளம் பெண்களுக்குப் பிடித்தபடி கலெக்‌ஷன்கள் வடிவமைப்பதில் சிறந்தவர்கள். இன்னும் பலப் புதுமையான பேஷனை உருவாக்கணும். அதில் டிரெண்ட் செட்டராக இருக்கணும். அதுதான் என் ஆசை.' என கன்னத்தில் குழி விழுகச் சிரிக்கிறார் சம்மர் அல் பார்சா.

இனி என்ன சம்மர், விண்டர்னு; எல்லா நாளும் பேஷன் பர்தா அணிந்து அசத்துங்க லேடீஸ்! 

- ராகுல் சிவகுரு.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ