Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

#UPDATE பாகிஸ்தான் குண்டுவெடிப்பு : 62 பேர் பலி

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் 14-16 வயது மதிக்கதக்க சிறுவன், பிரபல தர்கா ஷா நூரனி மசூதியில் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் சுமார் 62 பேர் பலியானதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது. 102 பேர் காயமடைந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தியதாக கூறப்படும், அப்துல்லா என்னும் சிறுவனின் புகைப்படமும் வெளியிட்டுள்ளனர். 

தாக்குதல் நடந்தபோது சுமார் 600 பேர் மசூதியில் இருந்தார்களாம். இந்த சம்பவதிற்கு பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரிஃப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடந்த நான்காவது மிகப்பெரிய பயங்கரவாத நிகழ்வு இது. தர்கா ஷா நூரனி மசூதி அருகே பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை தேடி அலைந்து கொண்டிருப்பதாகவும், பலர் புகைப்படங்களை வைத்து உறவினர்களை தேடி வருவதாகதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close