Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தோல்விக்கு காரணம் சொல்லும் ஹிலரி...

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் சென்ற புதன் கிழமை வெளியானது. இதில், குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் ஹிலரி கிளின்டன் தோல்வி அடைந்தார்.

இதனையடுத்து, தான் தோல்வி அடைந்ததற்கு, அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அமைப்பு  முக்கிய காரணம் என்று கூறியுள்ளார் ஹிலரி.


இந்த விஷயம் பற்றி, 'அதிபர் தேர்தலில் நான் தோற்றதற்கு பல காரணங்கள் இருக்கிறது. ஆனால், கடைசி நேரத்தில் எஃப்.பி.ஐ என் மீது விசாரணையை தொடங்கியது, என் தரப்பு பிரச்சாரத்தை வலுவிழக்கச் செய்துவிட்டது.' என்று கூறினார்.

எடிட்டர் சாய்ஸ்