Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட 'மம்மி' எகிப்தில் கண்டுபிடிப்பு

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், எகிப்தில், கிட்டத்தட்ட 2,500 ஆண்டுகள் பழைய 'மம்மி' கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து, தெற்கு திசையில் 700 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மம்மி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், 'பல வண்ண அலங்காரங்கள், தொன்மை கால எகிப்தின் மத குறியீடுகள் போன்றவை இந்த மம்மியில் உள்ளன' என்று கூறியுள்ளனர்.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட 'மம்மி'களிலேயே மிகவும் பழையது 4,500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close