Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘ஒத்துழைப்பு தான் ஒரே வழி’- சீன அதிபர்

அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர்  போன் மூலம் பேசிக் கொண்டதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த உரையாடலின்போது, ஜின்பிங், 'சீனாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்புடன் இயங்குவது தான் ஒரே வழி. இரண்டு நாடுகளும் அவர்தம் பொருளாதாரத்தை வளர்க்கத் தேவையான ஒருங்கிணைப்புடன் இயங்க வேண்டும்.' என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு டொனால்ட் ட்ரம்ப், 'சீனாவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமுடன் இருக்கிறேன் என்றும் ‘அமெரிக்க-சீன உறவின் மூலம் கண்டிப்பாக அதிக வளர்ச்சி எட்ட முடியும்' என்று கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெனால்ட் ட்ரம்ப் அவரது தேர்தல் பிரசாரங்களின்போது, 'சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 45 சதவீதம் வரை வரி விதிக்கப்படும்' என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ