Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கார்பன் உமிழளவு உலக அளவில் எப்படி இருக்கிறது..?

CO2 எனப்படும் கார்பன்-டை ஆக்சைடின் உமிழ்வு கடந்த மூன்று ஆண்டுகளாக குறைந்துள்ளதாக அறிக்கை ஒன்று கூறுகிறது. ஆயினும், புவி வெப்பமயமாதலை தடுக்க இது போதாது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.


உலக அளவில் 2015-ம் ஆண்டு CO2 வெளியீடு 36.3 பில்லியன் டன்களாக இருந்தது. அதேபோல் 2016-ம் ஆண்டு முந்தைய ஆண்டை விட 0.2 சதவீதமே அதிகரித்தது என்று 'உலகளாவிய கார்பன் பட்ஜெட்' அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கையை உலகின் பல்வேறு இடங்களிலிருக்கும் விஞ்ஞானிகள் கூட்டாக சேர்ந்து தயாரித்துள்ளார்கள்.  

கடந்த சில ஆண்டுகளாக CO2 வெளியீடு குறைந்துள்ளதைப் பற்றி,'பல நாடுகள் பொருளாதார ரீதியாக முன்னேறிக் கொண்டிருக்கும்போது, கடந்த மூன்று ஆண்டுகளாக CO2 வெளியீடு குறைவாக உள்ளது நல்ல அறிகுறி. ஆனால், இந்த சிறிய முன்னேற்றம் மட்டும் போதாது.' என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


புவி வெப்பமயமாதலை கட்டுக்குள் வைத்திருக்க உலக நாடுகளில் பெரும்பான்மையானவை, ஐ.நா தலைமையில் 'பாரீஸ் ஓப்பந்தம்' போட்டுக் கொண்டது. அந்த ஒப்பந்தம் கடந்த 4-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி, உலகின் சராசரி வெப்ப அளவை 2 டிகிரிக்கு மேல் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது. அந்த அளவை எட்ட 2030 வரை CO2 அளவு, ஆண்டுக்கு 0.9 சதவீதம் குறைக்கப்பட வேண்டும்.

எடிட்டர் சாய்ஸ்