Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெண்கள் பணியமர்த்தப்பட்டால் இந்தியாவின் வருவாய் 27% அதிகரிக்கும்:  கிறிஸ்டின் லகார்ட் 

இந்திய தொழில்துறையில் ஆண்களின் எண்ணிக்கைக்கு  நிகராக பெண்களும் பணியமர்த்தப்பட்டால்,  இந்தியாவின் வருவாய் 27% உயரும் என சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டின் லகார்ட் தெரிவித்துள்ளார். 

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற பெண்கள் மேம்பாட்டு மாநாட்டில் பேசிய கிறிஸ்டின், ”சர்வதேச அளவில் பெண்களுக்கு சம ஊதியம் மற்றும் சிறந்த பொருளாதார வாய்ப்புகள் கிடைத்தால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏற்றமடையும். தொழில்துறையில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரித்தால், அமெரிக்காவின் தேசிய வருமானத்தில் 5% அதிகரிக்கும், ஜப்பான் தேசிய வருமானத்தில் 9% அதிகரிக்கும், இந்தியாவின் தேசிய வருமானம் 27% அதிகரிக்கும்”,  எனக் குறிப்பிட்டார். 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ