Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மலேசியாவில் வெளுத்து வாங்கிய கனமழை!

ஒரு மாதத்துக்குப் பிறகு மலேசியாவில் மழை வெளுத்து வாங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பூச்சோங் என்ற பகுதியில், கடந்த ஒரு மாதத்துக்குப் பிறகு பகல் நேரத்தில் பலத்த மழை பெய்தது. 2 மணி நேரத்துக்கும் அதிகமாகப் பெய்த மழையால், சுமார் 10 சென்டி மீட்டருக்கு அதிகமாக மழை பதிவாகி உள்ளது. இதனால், சாலையின் இருபுறங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

மலேசியாவில் அடுத்த மாதம் முதல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்று அந்நாட்டு அரசு ஏற்கெனவே எச்சரித்திருந்த நிலையில், இன்று திடீரென்று பெய்த கன மழையால் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ந்துள்ளனர். இந்த மழை நீர், குடிநீர் தட்டுப்பாட்டை ஓரளவுக்குப் போக்கும் என்றும் கூறப்படுகிறது.

மலேசியாவில் நிலத்தடி நீர்மட்டம் கிடையாத நிலையில், குடிநீருக்கு அதிக அளவில் மழைநீர் சேகரிப்பு முறையே பயன்படுத்தப்படுகிறது. இதனால் அந்நாட்டில், நகர வடிகால் கட்டமைப்பு முழுமையாகச் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, எவ்வளவு பெரிய கன மழை பெய்தாலும், அடுத்த சில மணி நேரங்களிலே மழை நீர் வடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close