Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஐ-ஃபோன் மீது தூங்கியதால் தீக்காயங்களுடன் எழுந்த பெண்..!?

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மெலனி டேன் பெலேஸ், ஃபேஸ்புக்கில், 'எனது ஐ-போனை சார்ஜ் செய்தபோது, அதன் மீதே படுத்து உறங்கியதால் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது' என்று கூறி புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் என ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.


தீக்காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட பின் மெலனி,'மருத்துவமனையில் பல சோதனைகள் செய்யப்பட்ட பின், இந்த தீக்காயங்கள் ஏதோ ஒரு பொருளால் ஏற்பட்டது என்றனர். எனது கையில் ஏற்பட்டிருக்கும் காயங்களை வைத்துப் பார்த்தால், எனது ஐ-போன் மற்றும் அதன் சார்ஜர் மூலம் தான் என்பது விளங்குகிறது. போனை பயன்படுத்தும் அனைவரும் சற்று கவனத்துடன் அதை கையாளுங்கள்' என்றார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ