Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரஷ்யாவைப் பின்தொடரும் பிலிப்பைன்ஸ்..!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து, தான் விலகுவதாக ரஷ்யா அறிவித்ததை அடுத்து, பிலிப்பைன்ஸும், 'ரஷ்யாவின் பாதையை பின்பற்றுவோம்' என்று கூறியுள்ளது.

ரஷ்ய அதிபர் புதின், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இருந்து விலகுவதற்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். சிரியாவில், ரஷ்யா நடத்தும் வான்வழி தாக்குதல்களால், பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை உலக மனித உரிமை அமைப்புகள் கூறி வந்த நிலையில், ரஷ்யா விலகுவதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளி வந்ததையடுத்து பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ ட்யுட்ரேட்,'சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பயனற்றது. ரஷ்யா விலகியுள்ளனர். நாங்களும் அவர்களை பின்பற்றலாம்.' என்று கூறியுள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டில், போதைப்பொருளுக்கு எதிராக அதிபர் ரோட்ரிகோ எடுத்து வரும் நடவடிக்கைகளால், கிட்டத்தட்ட 2,400 பேர் வரை இறந்துள்ளதாக மனிதஉரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பிலிப்பைன்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ