Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

FacioMetrics-ஐ வாங்கிய ஃபேஸ்புக்

முக பாவனைகளை கண்டுபிடித்து, அதற்கேற்றார் போல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மெருகேற்றும் ஆப் FacioMetrics. இது எந்த ஒரு பெரிய நிறுவனங்களின் துணையும் இல்லாமல் ஆரம்பிக்கப்பட்ட ஸ்டார்ட்-அப். இந்த ஆப்-ஐ ஃபேஸ்புக் தற்போது வாங்கியுள்ளது. இதன் மூலம், ஃபேஸ்புக்கின் வீடியோ சேட்டிங் மேலும் மெருகேற்றப்படும் என்று கூறப்படுகிறது.


இது பற்றி ஃபேஸ்புக் நிறுவனம்,'மக்கள் எப்படி ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கிறார்கள் என்பது மாறிக் கொண்டே வருகிறது. புதிதாக அறிமுகம் செய்ய உள்ள 'மாஸ்க்' மற்றும் 'எஃபக்ட்ஸ்' மக்களை புதிய வழியில் தொடர்பு கொள்ளச் செய்யும்.' என்று தெரிவித்துள்ளது.


இது பற்றி FacioMetrics,'தற்போது நாங்கள் ஃபேஸ்புக்குடன் இணைந்துள்ளதால், ஒரு பெரிய அடியை எடுத்து வைக்கிறோம். இதன் மூலம் நாங்கள் செய்யப்போகும் வேலையின் வீச்சு பல மடங்குக்குப் பெருகும். உலக அளவில் நாங்கள் பல பேரை சென்றடைவோம்.' என்று கூறியுள்ளது.  

எடிட்டர் சாய்ஸ்

MUST READ