Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காற்று மாசு... சீனாவை முந்தும் இந்தியா..!

2015-ம் ஆண்டில், காற்று மாசினால், சீனாவில் இறந்தவர்களை விட இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்று 'க்ளோபல் பர்டன் ஆஃப் டிசிஸ் ஸ்டடி' என்ற ஆய்வு கூறியுள்ளது.

2015-ம் ஆண்டு காற்று மாசினால் சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,233 பேர், அதே ஆண்டில் இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கையோ 3,283 பேர் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாவதை பற்றி கிரீன்பீஸ் அமைப்பைச் சேர்ந்த சுனில் தாஹியா, 'இந்த ஆய்வின் தரவுகள், சீனா தொடர்ச்சியாக காற்று மாசுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகளால் அங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தெரிகிறது. ஆனால், இந்தியாவில் அதற்கு நேர்மாறாக செயல்பாடுகள் இருக்கிறது. அதுவும், 2015ல் மிகவும் மோசமான நிலை நிலவுகிறது.' என்று கூறினார்.
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ