Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இந்தியா - பாகிஸ்தான் பிரச்னைக்கு மோடியே காரணம்': முஷரஃப் தாக்கு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தற்போதைய பிரச்னைக்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரஃப் குற்றம் சாட்டி உள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டியில், "இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தற்போதைய பிரச்னைக்கு பிரதமர் மோடியே முக்கிய காரணம். சர்வதேச அளவில் இப்போது பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கும் நரேந்திர மோடியே முக்கிய காரணம். பாகிஸ்தானில் இந்துக்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.  ஆனால், இந்தியா போராட்டங்களைத் தூண்டி வருகிறது.

காஷ்மீர் பிரச்னை முடிவுக்கு வரும் வரை, பதான்கோட், உரி தாக்குதல் போன்று தொடர்ந்து நடக்க வாய்ப்பு இருக்கிறது. மோடியின் பல செயல்பாடுகள் வருத்தம் அளிக்கிறது. பல காரணங்களால், பாகிஸ்தானில் தாவூத் இப்ராகிம் பெரிதும் மதிக்கப்படுகிறார். 

இந்தியாவின் முன்னாள் பிரதமர்களான வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் மீது மிகுந்த அன்பும், மரியாதையும் உள்ளது. அவர்கள் சிறந்த மனிதர்கள். 

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஆட்சியின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவரை கையாள முடியும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் நல்லதே நினைக்கிறோம், எங்களுக்கு நல்லதே நடக்கும்" என்று அவர் விளக்கமாக தெரிவித்தார்.  

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ