Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ட்ரம்ப் - ஷின்சோ வரலாற்று சந்திப்பு !

ட்ரம்ப் அமெரிக்க தேர்தலில் வெற்றிப் பெற்ற பின்  சர்வதேச தலைவருடனான முதல் அதிகாரப் பூர்வ சந்திப்பு நேற்று டிரம்ப் இல்லத்தில் நடைப்பெற்றது.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடனான இந்த முதல் சந்திப்பின் போது பத்திரிகையாளர்கள் உள்ளே அனுமதிக்கபடவில்லை. அதுமட்டுமின்றி ட்ரம்ப்பின் மகள் ஐவான்கா மற்றும் அவரின் கணவரும் சந்திப்பில் கலந்து கொண்டது அமெரிக்க மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் சமயங்களில் ட்ரம்பின் ஆலோசகராக இருந்தது ஐவான்கா மற்றும் அவரின் கணவரும் தான். 

இந்நிலையில் சர்வதேச தலைவர்களுடனான சந்திப்பில் குடும்ப நபர்கள் பங்குபெறுவது அசாதாரணமான ஒன்று. இந்த நிகழ்வின் மூலம் ட்ரம்ப் அமைச்சகத்தில் அவரின் மகள் மற்றும் மருமகனுக்கு முக்கிய அதிகாரம் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கபடுகிறது என அமெரிக்க கல்லூரி பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும்  இந்த சந்திப்பு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா மீது நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே குறிப்பிட்டுள்ளார். 
 

எடிட்டர் சாய்ஸ்