Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பூமிக்கு திரும்பினர் சீன விஞ்ஞானிகள்!

விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கும் பணியில் சீனா இறங்கியுள்ளது. இதற்காக ஏற்கெனவே ஐந்து முறை விஞ்ஞானிகளை விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி ஆறாவது முறையாக இரண்டு  சீன விஞ்ஞானிகள் விண்ணுக்கு அனுப்பப்பட்டனர்.  'செனஷோவ் 11' என்ற விண்கலம் மூலம் இந்த விஞ்ஞானிகள் விண்ணுக்கு அனுப்பப்பட்டு இருந்தனர். இந்நிலையில் இவர்கள் பணிகளை முடித்து விட்டு, ஒரு மாதத்துக்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ளனர். பூமியில் இருந்து சுமார் 393 கி.மீ., உயரத்தில் அமையும் விண்வெளி ஆய்வு மையத்தின் பணிகள் 2022-ல் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விண்வெளியில் அதிக நாட்கள் தங்கிய விஞ்ஞானிகள் என்ற பெருமையையும் இவர்கள் பெற்றுள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ