Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அலெப்போவில் அனைத்து மருத்துவமனைகளும் தகர்க்கப்பட்டுவிட்டன'

சிரியாவின் கிழக்கு-அலெப்போ நகரில் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளும் முற்றிலும் தகர்க்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரில், அலெப்போ நகரின் கிழக்கு பக்கம் கிளர்ச்சியாளர்கள் வசமும், மேற்கு பக்கம் சிரிய அரசிடமும் இருக்கிறது. இதில் கிழக்குப் பக்கத்தில் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளும் தொடர் தாக்குதலினால் தகர்க்கப்பட்டுவிட்டதாக அங்கிருக்கும் மருத்துவ அதிகாரிகள் கூறுகிறார்கள். சனிக்கிழமை நடந்த வான்வழி தாக்குதல்களால் மட்டும் கிட்டத்தட்ட 56 பேர் வரை இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதில் குழந்தைகளும் அடங்குவார்கள் என்று களத்தில் பணியாற்றும் செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். 


'கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு அலெப்போவில் அனைத்து மருத்துவமனைகளிலும் சுகாதார சேவைகள் முடங்கியது.' என்று உலக சுகாதார அமைப்பும் கூறியுள்ளது.


இன்னும் கிழக்கு அலெப்போவில் 2,50,000 மக்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர்.  

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close