Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிரியாவில் பள்ளி மீது தாக்குதல்: 8 குழந்தைகள் பலி

சிரியாவின் அலெப்போ நகரில், பள்ளி மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதில் 8 குழந்தைகள் உயிரிழந்தனர் என்று தகவல் வந்துள்ளது.

சிரிய ராணுவமும் தொடர்ச்சியாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் இரு தரப்பும் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 240 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இது பற்றி ஐ.நா கூறுகையில், 'சிரியாவில் சமீபகாலமாக நடந்து வரும் தாக்குதல்கள் அதிர்ச்சியாகவும், சோகம் தரக்கூடிய வகையிலும் உள்ளது. மக்கள் மீதும் மக்கள் வாழும் பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்துவதை அனைத்துத் தரப்புகளும் உடனடியாக நிறுத்த வேண்டும்' என்று கூறியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கிழக்கு அலெப்போவில் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளும் தகர்க்கப்பட்டன என்று செய்தி வந்ததையடுத்து, இன்று பள்ளி மீது தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ