Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கறுப்பு பண விவகாரம்: இந்தியா-சுவிட்சர்லாந்து ஒப்பந்தம்

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களின் விவரங்களை பகிர்வது தொடர்பாக இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக இந்தியாவில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக  மத்திய அரசு அறிவித்தது. மேலும் புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் ஒரு பகுதியாக இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அதன்படி, சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களின் பெயர்கள் 2018-ம் ஆண்டு தெரிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இந்தியர்கள் வைத்துள்ள வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனை குறித்த விவரங்கள் 2019-ம்  ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு இந்தியாவுக்கு தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close