Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓரினச்சேர்க்கையாளர்களின் கண்ணீருடன் முடிந்த ஒபாமாவின் கடைசி விழா!

அமெரிக்காவின் சிறந்த குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'சுதந்திர விருதுகள்' நேற்று வழங்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமா அதிபராக கலந்துகொள்ளும் கடைசி விழா இது. இதில் பிரபல ஹாலிவுட் நடிகர்கள் டாம் ஹேங்ஸ்,  ராபர்ட் டி நீரோ, ரெட் போர்ட், தொழிலதிபர் பில் கேட்ஸ், விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டன் உள்ளிட்ட 21 நபர்களுக்கு வழங்கப்பட்டது. 

மிகவும் உணர்ச்சிகரமாக நடந்த இந்த விழாவில்  ஒபாமா ஒவ்வொருக்கும் விருது வழங்கும் போது அவர்கள் பற்றிய குறிப்புகள் ஒலிபெருக்கியில் வாசிக்கப்பட்டன. விருது பெறுபவர்களில் ஒருவரான அமெரிக்காவின் பிரபல ஸ்டேண்ட் அப் காமெடியனும், டாக்-ஷோ பிரபலமான எலன் டி ஜெனிரெஸ் அவர்களைப்பற்றிய குறிப்பு வாசிக்கப்பட்டது. "எலன் பிறப்பால் பெண் மற்றும் ஓரின சேர்க்கை சமூகமான எல்ஜிபிடியை(LGBT) சேர்ந்தவர். இன்று அமெரிக்காவில் ஓரின சேர்க்கை திருமணங்களுக்கு அரசின் ஆதரவே இருந்தாலும் இருபது வருடங்களுக்கு முன் அப்படி ஒரு நிலை இல்லை. அப்போதே அவர்களின் உரிமைக்காக குரல் கொடுத்தவர் எலன் டி ஜெனிரெஸ். எலன் இந்த விருதுக்கு பொருத்தமானவர். அவர் அமெரிக்காவை மானுட தளத்தில் முன்நகர்த்த பாடுபட்டார்" என அந்த குறிப்பு விவரிக்கும் போது எலன் கலங்கிவிட்டார். அருகிலிருந்த அதிபர் ஒபாமா அவரை தட்டிக்கொடுத்து ஆறுதல் சொன்னார்.

ஒபாமா

கடந்த  1997-ம் ஆண்டு ஏப்ரலில் வெளியான 'டைம்' இதழ் பேட்டியில் எலன் தன்னை 'ஓரினச் சேர்க்கையாளராக' அறிவித்துக்கொண்டார். அதன் பின்னர்தான் அவருக்கு சோதனைகள் காத்திருந்தன. தற்போது 58 வயதாகும் எலன் தன்னுடைய 38 வயதில் தன் பால் விருப்பத்தை அறிவித்தார். அதை தொடர்ந்து பல தொலைக்காட்சி தொடர்களில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் எலன் அதை பற்றி கவலைப்படவேயில்லை "என் மனதுக்கு எவ்வளவு நேர்மையாக இருக்க முடியுமோ அவ்வளவு நேர்மையாக இருக்க விரும்பினேன். அந்த உண்மையைத்தான் வெளியே சொன்னேன்" என்று சொல்லி வாழ்க்கையை எதிர்கொண்டார். அந்த நேரத்தில் இருந்த ஒரே துணை அவரின் தாயார் பெட்டி டி ஜெனிரெஸ் மட்டுமே. அவருமே எலன் இப்படி வெளிப்படையாக டைம் இதழில் பேட்டியளித்த பிறகுதான் அறிந்துகொண்டார். இருந்தாலும் மகளின் முடிவு அவரின் மனம் சார்ந்த ஒன்று என்பதால் ஏற்றுக்கொண்டுள்ளார். "எனக்காவது பரவாயில்லை.நிறைய எல்ஜிபிடி சமூக மக்களுக்கு அவர்களின் குடும்பத்தினரின் அன்பு கிடைப்பதேயில்லை" என அவர்களுக்காக வருத்தப்பட்டார் எலன். 

எலனின் 'டாக் ஷோ' இன்று அமெரிக்க தொலைக்காட்சிகளில் மிகப்பிரபலமான ஒன்று. 1994ல் தொடங்கி வெற்றிகரமாக அந்த ஷோ நடந்து கொண்டிருந்த போதுதான் தன்னை பற்றிய அறிவிப்பை எலன் வெளியிட்டார். அடுத்த சிலமாதங்களில் அவரின் ஷோ நிறுத்தப்பட்டது.  அதன் பின்னர் 3 வருட போராட்டத்துக்கு பின்னர் 2001-ல் மீண்டும் தன் நிகழ்ச்சியை தொடங்கினார். இன்று வரை மிகப்பெரிய வெற்றியுடன் அது ஒளிபரப்பாகி வருகிறது.

எலனுக்கு விருது வழங்கிய போது " எலன், இந்த சமூகத்தின் பெருமைமிகு அடையாளம். இன்று எளிதாக மறந்து விடலாம். இன்று ஓரின திருமணங்கள் சட்டப்பூர்வமாகிவிட்டன. எல்லாமே சாதாரண விஷயங்களாகிவிட்டன. ஆனால் தங்களை வெளிக்காட்டிக்கொள்ளவே சங்கடப்பட்ட காலத்தில் பொது மேடைகளில் எல்ஜிபிடியின் குரலாக ஒலித்தவர் எலன். அதற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்தின் மீது அன்பு செலுத்துகிறார். நம் அன்டை வீட்டாரைப்போல, உடன் வேலை செய்பவரைப்போல, நம் சகோதரியைப்போல நம்மிடம் சவால் விடுத்து வாழ்ந்து காட்டியுள்ளார்" என நெகிழ்ச்சியுடன் ஒபாமா குறிப்பிட்டார். 

ஒபாமா எலன்


அமெரிக்க வரலாற்றில் முதல் கறுப்பர் ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஒபாமா ஒடுக்கப்பட்ட சமூகமாக கருதப்படும் எல்ஜிபிடி  (லெஸ்பியன்,கே,பை-செக்ஸுவல்,மற்றும் ட்ரான்ஸ்ஜென்டர்கள்) யினருக்கு அதிக உரிமைளையும் சலுகைகளையும் வழங்கியவர். ஓரினச்சேர்க்கையாளர்களின் 'பெருமை பேரணி' நடைபெறும் போது வெள்ளை மாளிகையிலும் அதை விழாவாக கொண்டாடியவர். முதன் முதலாய் ஒரினச்சேர்க்கையாளர்கள் ஹார்வி மில்க் மற்றும் பில்லி ஜீன் கிங் ஆகியோருக்கு ஜனாதிபதி விருது அறிவித்தவர் அவரே. அமெரிக்க அதிபராக அவர் கலந்துகொண்ட கடைசி விழாவிலும் எல்ஜிபிடி சமூகத்தை சேர்ந்த எலன் டி ஜெனிரெஸுக்கு விருது வழங்கியதை அந்த சமூகம் நெகிழ்ச்சியுடன் காலம் எல்லாம் நினைவு கூறும். 

-வரவனை செந்தில்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close