Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ட்ரம்ப்பை விட ஹிலரிக்கு அதிகம்!

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 8ம் தேதி நடந்தது. இதில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப் யாரும் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். 


ஜனநாயகக் கட்சியின் ஹிலரி கிளின்டன் இந்த தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும், வாக்குகள் சதவீதத்தில் ட்ரம்பை விட முன்னிலையில் இருந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் வெளியாகும் பத்திரிகைகளில் 'பாப்புலர் ஓட்டுகள்' மூலம் ஹிலரி, ட்ரம்ப்பை முந்தியுள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளன.


பாப்புலர் ஓட்டு எனப்படுவது, அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான மொத்த ஓட்டுகளில், ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் மாகாணம் வாரியாக எவ்வளவு ஓட்டுகள் பதிவாகி இருக்கிறது என்பதை தெரிவிப்பது. இந்த பாப்புலர் ஓட்டில் தான் ஹிலரி, ட்ரம்ப்பை விட 20 லட்சம் ஓட்டுகள் அதிகம் வாங்கியுள்ளார் எனக் கூறப்படுகிறது. 


சில மாகாணங்களில்... ட்ரம்ப், ஹிலரியை விட சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றதால், ஹிலரியின் ஆதரவாளர்கள் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று போர்கொடி தூக்கி உள்ளனர்.


இது பற்றி ஹிலரி கிளின்டன் எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close