Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அண்மை காலமாக உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் சீனாவின் வடமேற்கு மாகாணமான ஜின்ஜியாங்கில் இன்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.5 முதல் 7.0 அளவு வரை பதிவாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சுமார் 120 கி.மீ. தூரத்துக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் நில நடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ