Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நிலக்கரி எரிசக்திக்கு விரைவில் பின்லாந்தில் தடை..!

பின்லாந்து எரிசக்தி மூலம் மின்சாரம் எடுப்பதற்கு வரும் 2030 முதல் தடை விதிக்க உள்ளது. கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரி மூலம் எரிசக்திக்கு மாற்றாக மாற்று எரிசக்திக்கு மாறி வந்தாலும், முதல் முறையாக பின்லாந்து தான் தடை விதிப்பது பற்றி பேசி இருக்கிறது. தற்போது, பின்லாந்தின் மின்சாரத் தேவையை நிலக்கரி எரிசக்தி 10 சதவீதம் பூர்த்தி செய்கிறது. 


பின்லாந்து, 2050க்குள் முழுவதும் மாற்று எரிசக்திக்கு மாற இலக்கு வைத்துள்ளது. இதே போன்று பிரிட்டன், பிரான்சு, கனடா போன்ற நாடுகளும் மாற்று எரிசக்தியின் மூலம் மின்சாரம் எடுப்பதை அதிகரிக்க இலக்கு வைத்துள்ளது.


உலக நாடுகள் பெரும்பாலானவை மாற்று எரிசக்திக்கு மாறி வரும் நிலையில், அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப், நிலக்கரி மற்றும் ஷெல் சக்தி மூலம் மின்சாரம் எடுப்பதற்கு உள்ள தடைகளை தளர்த்த உள்ளதாகக் கூறியுள்ளார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close