Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பருத்தி இறக்குமதியை நிறுத்தியதா பாகிஸ்தான்?

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பருத்திகள், அங்கு இறக்குமதி செய்யப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பாக்., அதிகாரிகள் கூறுகையில், 'இந்தியாவிடம் இருந்து தக்காளி உள்ளிட்ட விவசாய உற்பத்திகளை ஏற்கெனவே நிறுத்தி வைத்துள்ளோம். காரணம் பாகிஸ்தானிடம் தக்காளி, வெங்காயம் இருப்புகள் போதுமான அளவு உள்ளன. எனவே, பாகிஸ்தானில் உள்ள விவசாயிகளின் நலனுக்காக விவசாயப் பொருட்கள் வாங்கப்படவில்லை. இந்நிலையில் இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பருத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பருத்தி உற்பத்தியாளர்கள் பாகிஸ்தானில் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள நடைமுறையை பின்பற்றுவதில்லை. இதனால்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'. என்றனர்.  கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பருத்தி ஏற்றி சென்ற சரக்கு லாரிகளும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ