Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிடல் காஸ்ட்ரோ இறுதிச்சடங்கு: ராஜ்நாத்சிங் க்யூபா பயணம்

கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்கில், இந்தியா சார்பில் கலந்துகொள்வதற்காக மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் க்யூபா செல்ல உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ நவம்பர் 26-ம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் க்யூபா நாட்டில் 9 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. மேலும், பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச்சடங்குகள் டிசம்பர் 4 ம் தேதி நடக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக ராஜ்நாத் சிங் கியூபா நாட்டுக்குச் செல்லவுள்ளதாக மத்திய அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, இதுபோன்ற உலகநாடுகளின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ள, ஒரு நாட்டின் குடியரசுத்தலைவரோ, பிரதமரோ அல்லது வெளியுறவுத்துறை அமைச்சரோ பங்கேற்பது வழக்கம். ஆனால், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவருக்கு மாற்றாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கியூபா செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

உலகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close