Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கருவில் இருக்கும் குழந்தையை காணும் புதிய தொழில்நுட்பம்

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, கருவில் இருக்கும் குழந்தையை காணும் புதிய தொழில்நுட்பத்தை இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். IVS எனப்படும் இந்த தொழில்நுட்பத்தில், கரு உருவான முதல் நாளில் இருந்தே அதன் செல்களின் இயக்கங்களை காணலாம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஆய்வகத்தில், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கருவின் படங்களை எடுத்து, யூ.எஸ்.பி மூலம் பெற்றோருக்கு அனுப்பப்படும். குறிப்பாக மிகவும் கடினமான சூழ்நிலைகளில் இந்த தொழில்நுட்பம் கைகொடுக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதுகுறித்து விஞ்ஞானிகள், 'கருமுட்டை மிகவும் உணர்ச்சிகரமான ஒன்று. முன்பு அதைப் பயன்படுத்தி 24 மணி நேரத்துக்கு ஒருமுறைதான் அதன் இயக்கங்களை படம் பிடிக்க முடியும். ஆனால், தற்போது IVS தொழில்நுட்பத்தில் 10 நிமிடத்துக்கு ஒருமுறை கருமுட்டை இயக்கங்களை படம் பிடிக்கலாம்' என்று கூறுகின்றனர்.

எடிட்டர் சாய்ஸ்