Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கால்பந்து வீரர்களுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது

பிரேசில் நாட்டு கால்பந்து வீரர்களுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் போலியாவிலிருந்து கொலம்பியாவின் மெடல்லின் சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்லும் வழியில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 81 பயணிகள் இதில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விமானத்தில் பிரேசிலின் சாப்கோயின்ஸே கால்பந்து அணி வீரர்களும் பயணம் செய்துள்ளனர். விமானத்தில் பயணம் செய்த ஆறு பேரை தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வந்துள்ளது. கால்பந்து அணியை சேர்ந்த வீரர்கள் யாரேனும் உயிர் பிழைத்தனரா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close