Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

117-வது பிறந்தநாளை கொண்டாடும் உலகின் வயதான மூதாட்டி

இத்தாலியின் எம்மா மோரேனோவுக்கு இன்று 117-வது பிறந்தநாள். கின்னஸ் உலக சாதனை அமைப்பின் படி, உலகிலேயே மிக வயதான நபர் எம்மா தான். 1899-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிறந்த எம்மா, 19-ம் நூற்றாண்டில் பிறந்து, உயிர் வாழும் கடைசி நபர்.

இவ்வளவு நாள் உடல்நலத்துடன் வாழும் எம்மா, ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளும் சில பிஸ்கட்டுகள் மட்டும் தான் சாப்பிடுகிறார். பல ஆண்டுகளாகவே தனியாக வாழ்ந்து வரும் எம்மா, அதிக நாள் உயிர் வாழ்வதால் தன்னை நிறைய பேர் பார்க்க வருகிறார்கள் என்று கூறுகிறார். 'நான் யாரையும் அழைப்பதில்லை என்றாலும், நிறைய பேர் என்னைப் பார்க்க வருகிறார்கள். அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளிலும் இருந்து கூட நிறைய பேர் என்னைப் பார்க்க வருகிறார்கள்.' என்கிறார் எம்மா. 

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close