Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புரட்சி நாயகன் ஃபிடல்காஸ்ட்ரோ சந்தித்த தலைவர்களும்... சில நிகழ்வுகளும்..! (Album)

பிடல் சந்தித்த தலைவர்கள் மற்றும் நிகழ்வுகளை  காண இங்கே க்ளிக் செய்யுங்கள்.

சதிமிக்க குடும்பத்தில் பிறந்த புரட்சி நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ. ஏழை மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அந்த ஏழை மக்களுக்காக பொதுவுடமை போராட்டத்தை நடத்தி பலவித தாக்குதலுக்கு உள்ளானவர். அமெரிக்கா தனது கோரமுகத்தை ஃபிடல் காஸ்ட்ரோ மீது திருப்பிய போதும் சற்றும் தளராத மனவலிமை போராளி..  

அமெரிக்காவின் கைப்பாவையான பாடிஸ்டா அரசு ஒருமுறை ஃபிடல்காஸ்ட்ரோவை  கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது. அவருக்காக வாதாட வந்த வழக்கறிஞர்களையும் சூழ்ச்சி செய்து தடுத்தபோது தனக்காக தானே நீதிமன்றத்தில் வாதாடியவர் ஃபிடல் காஸ்ட்ரோ.

அவர் ஆற்றிய அந்த வாதம் அனைத்து  நாடுகளையும் திரும்பி பார்க்க செய்தது." நீங்கள் என்னை கைது செய்யலாம் தண்டிக்கலாம். ஆனால் வரலாறு என்னை விடுதலை செய்யும் " என்பதே அந்த புரட்சி நாயகனின் வீரமிகு கூற்று .

எங்கெல்லாம் உரிமையயும் , நீதியும் மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஃபிடல்காஸ்ட்ரோவின் அந்த செறிவு மிக்க வாதம்  ஒலித்துக் கொண்டு தான் உள்ளது.ந்த மாபெரும் புரட்சியாளன் சந்தித்த தலைவர்களும்  புகைப்படங்களையும் சில நிகழ்வுகளையும் இங்கே காண்போம்.

பிடல் சந்தித்த தலைவர்கள் மற்றும் நிகழ்வுகளை  காண இங்கே க்ளிக் செய்யுங்கள்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ