Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுற்றுச்சூழலை காக்க உடனடி நடவடிக்கை தேவை-போப்

உலக சுற்றுச்சூழலை காக்க போடப்பட்ட ஒப்பந்தங்களை தாமதிக்காமல் செயல்படுத்த வேண்டும் என்று போப் ஃபிரான்சிஸ் கூறியுள்ளார். 

'சுற்றுச்சூழலுக்காக உலக அளவில் போடப்பட்ட ஒப்பந்தங்களை செயல்படுத்த ஆர்வம் காட்டாமல் இருப்பது, எல்லாவற்றுக்கும் மேல் லாபம் ஒன்றே நோக்கமாக வைத்து நகரும் பொருளாதாரத்தைத் தான் காட்டுகிறது.' என்று பேசியுள்ளார்.

ஐ.நா தலைமையில் சுற்றுச்சூழலைக் காக்க 200க்கும் மேற்பட்ட நாடுகள் கூட்டாக போட்ட பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகும் என கசிந்த செய்திகளுக்குப் பிறகு போப் இப்படி கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப், புவி வெப்பமயமாதல் ஒரு பொய் என தொடர்ச்சியாக பிரசாரங்களில் பேசி வந்தார் என்பது கவனத்துக்குரியது. 

'உலகின் அழுகையை, ஏழைகளின் அழுகையை கவனியுங்கள், விரைவாக நடவடிக்கை எடுங்கள்' என்று உலக தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் போப் ஃபிரான்சிஸ்

எடிட்டர் சாய்ஸ்