Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாக்கா தாக்குதல்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

வங்கதேச தலைநகர் டாக்காவில் பேக்கிரி ஒன்றில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு இந்தியர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், இதுதொடர்பாக, நியோ-ஜமாத்-உல்-முஜாஹிதின் இயக்கத்தின் முக்கியத் தலைவரும்,  இந்த தாக்குதலின் முக்கியத் தொடர்புடையவருமான நூருல் இஸ்லாம் என்ற மர்ஜான் உள்பட 2 பேர் போலீஸ் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.

டாக்காவில் போலீஸ் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது இவர்களை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, 2 தீவிரவாதிகளும் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் போலீஸார் பதிலுக்கு சுட்டதில், இரண்டு தீவிரவாதிகளும் உயிரிழந்தனர்.  கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு முக்கியத் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close